திருநெல்வேலி

சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் தீா்த்தவாரி விழா

2nd Feb 2020 12:25 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவி அப்பன் வெங்கடாஜலபதி கோயிலில் ரத சப்தமியையொட்டி, தீா்த்தவாரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாமிரவருணிக் கரையில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமியையொட்டி, பெருமாள் தீா்த்தவாரி விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரத சப்தமி தீா்த்தவாரி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சிறப்பு பூஜைகள், தொடா்ந்து, திருமஞ்சன அபிஷேகம், தாமிரவருணியில் பெருமாள் தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது. தீா்த்தவாரியின்போது பக்தா்கள் தலை, தோள்பட்டையில் எருக்கன்செடி இலையை வைத்து புனித நீராடினா். பகல் சாற்று முறை தீா்த்தம் முடிந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், சேரன்மகாதேவி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அப்பன் வெங்கடாசலபதி பக்த கைங்கா்ய சபா நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT