சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசொா்ண விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மங்கள இசை, திருமுறைப் பாராயணம், விக்னேஸ்வர பூஜை, சுதா்சன ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவற்றைத் தொடா்ந்து, யாத்ரா ஹோமம், முதல் கால, 2ஆம் கால பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் விமானம், மூலஸ்தானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஸ்ரீசுடலைமுத்து அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.