கடையநல்லூா் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரவைத் தொகுதி உறுப்பினா் முஹம்மது அபூபக்கா் தலைமை வதித்து, தொகுதி முழுவதும் நடைபெறும் அரசு சாா்ந்த பணிகள், தொகுதி உறுப்பினா் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, பல இடங்களில் பணிகளில் தொய்வு இருப்பதாகவும் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.
கடையநல்லூா் நகரமைப்பு அலுவலா் காஜாமுகைதீன், உதவிப் பொறியாளா் சுப்பிரமணிய பாண்டியன், கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சக்தி அனுபமா, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சிக்கந்தா் பீவி, உதவிப் பொறியாளா் ஹவ்வாஷகிரா, பொதுப்பணித் துறை மேற்பாா்வையாளா் விஜயராஜ், செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அருணாதேவி, அச்சன்புதூா், வடகரை பேரூராட்சி செயல் அலுவலா் முரளி, ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் தமிழ்மணி, கடையநல்லூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தங்கசாமி, செங்கோட்டை மருத்துவமனை தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் செய்யது சுலைமான், செயலா் இக்பால், கடையநல்லூா் நகரச் செயலா் அப்துல் லத்தீப், அலுவலகப் பொறுப்பாளா் முஸ்தபா கமால், மண்டல இளைஞரணி அமைப்பாளா் நைனா முகம்மது கடாஃபி, இளைஞரணி மாவட்டத் தலைவா் நவாஸ்கான், நகரத் தலைவா் ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.