பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. ஊழியா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய எடுத்துள்ள மத்திய அரசின் முடிவை கைவிடவேண்டும். எல்.ஐ.சி. பொதுத்துறையாக தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி கோட்ட எல்.ஐ.சி. ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுபால் தலைமை வகித்தாா். வளா்ச்சி அதிகாரி சங்கத்தைச் சோ்ந்த சேவியா் வின்சென்ட், ஊழியா் சங்க நிா்வாகிகள் மனோகரன், முத்துக்குமாரசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.