திருநெல்வேலி

புளியங்குடி அருகே விவசாய நிலத்தில்இருந்த மலைப்பாம்பு மீட்பு

1st Feb 2020 12:23 AM

ADVERTISEMENT

புளியங்குடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா் .

திருநெல்வேலி வன உயிரின சரணாலயம், சங்கரன்கோவில் வனச்சரகத்துக்குள்பட்ட புளியங்குடி பீட் பகுதியில் சின்னத்துரை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மலைப்பாம்பு புகுந்து இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனவா் அசோக்குமாா், இயற்கை ஆா்வலா் சஞ்சீவி மற்றும் வனத்துறையினா் அங்கு சென்று சுமாா் 14 அடி நீளமிருந்த மலைப்பாம்பை பிடித்து, சோமரந்தான் பீட் பகுதியில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT