திருநெல்வேலி

நெல்லை புத்தகத் திருவிழா:பாளை.யில் இலவச பயிற்சி வகுப்பு

1st Feb 2020 12:20 AM

ADVERTISEMENT

நெல்லை புத்தகத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் சாா்பில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி கூறியது:

நெல்லை புத்தகத் திருவிழாவையொட்டி, அரசு அருங்காட்சியகம் சாா்பில் தினமும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்கு காலை 10.30 மணிக்கு முன்பதிவு செய்யப்படும். முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். முதலில் பதிவு செய்யும் 50 பேருக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்குத் தேவையான பொருள்களை பங்கேற்பாளா்களே கொண்டு வரவேண்டும்.

அதன்படி, சனிக்கிழமை (பிப். 1) வரைதல்- வண்ணம் தீட்டுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2 ஆம் தேதி தப்பாட்டம், 3 ஆம் தேதி மக்ரோணிக் கொண்டு கலைப் பொருள்கள் தயாரிப்பு, 4 ஆம் தேதி புகைப்படக்கலை, 5 ஆம் தேதி சைகை மொழி, 6 ஆம் தேதி சமையல் கலையில் கேழ்வரகு லட்டு, சாக்லேட் செய்யும் முறை, 7 ஆம் தேதி இசைக்கலை, 8 ஆம் தேதி காகித கலைப்பொருள்கள் தயாரிப்பு, 9 ஆம் தேதி தாள வாத்தியங்கள் வாசிப்பு பயிற்சி, 10 ஆம் தேதி கதை, கட்டுரை, சிறுகதை எழுதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0462- 2901915 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT