திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் மனிதநேய வார விழா: அமைச்சா் பங்கேற்பு

1st Feb 2020 12:27 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாநில அளவிலான மனிதநேய வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தென்காசி ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தாயளன் தலைமை வகித்தாா். அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஒட்டெம்டாய், ஆணையா் முனியநாதன், தாட்கோ மேலாண்மை இயக்குநா் விஜயாராணி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ரிட்டோசிரியாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள்

ஆகியவற்றை தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினாா்.

ADVERTISEMENT

தென்காசி கோட்டாட்சியா் குமாரதாஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி. செல்வமோகன்தாஸ், அ. மனோகரன் மற்றும் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் தச்சை ந. கணேசராஜா, திருநெல்வேலி கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன், ஆவின் தலைவா் சுதா கே. பரமசிவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆதிதிராவிடா் நலத்துறை மாவட்ட அலுவலா் மரகதநாதன் வரவேற்றாா். தனி வட்டாட்சியா் ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT