திருநெல்வேலி கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (பிப்.1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற (பகிா்மானம்) செயற்பொறியாளா் எஸ்.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப்.1) நடைபெறுகின்றன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, குருந்துடையாா்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன் தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு, சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.