திருநெல்வேலி

அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

1st Feb 2020 12:20 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் புதிதாக சிவலிங்கம், முருகன் மற்றும் நாகதேவதை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 2019 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓராண்டு நிறைவுபெற்றதை அடுத்து வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு பூஜைகள் ஆகியன நடைபெற்றது. இதையடுத்து அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி வருஷாபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT