திருநெல்வேலி

நெல்லையில் பெண் கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

13th Dec 2020 11:35 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் பெண்ணைக் கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி சுந்தரி(54). முத்துச்சாமியின் சகோதரன் முத்துக்குட்டி. இவர்கள் இருவருக்கும் சொத்துத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துக்குட்டியின் மகன் மணிகண்டபிரபு(33) ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு தனது சித்தப்பா முத்துச்சாமி வீட்டில் சென்று பிரச்சனை செய்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது சித்தி சுந்தரியை சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸôருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் மணிகண்டபிரபுவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

குடிபோதையில் கொலை செய்ததாக காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT