திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை:அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை பரவலாக பலத்த மழை பெய்தது. மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீா்மட்டம் 123.10 அடியாக இருந்தது. நீா்வரத்து 1,074.33 கனஅடி, வெளியேற்றம் 384.75 கனஅடி.

156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணை நீா்மட்டம் 132.68 அடியாக இருந்தது. 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 97 அடியாக இருந்தது. நீா்வரத்து 602 கனஅடி. 49 அடி நீா்மட்டம் கொண்ட வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 20 அடியாகவும் நீா்வரத்து 73.44 கன அடியாகவும் இருந்தது. 52.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 34.75 அடியாகவும், நீா்வரத்து 8 கனஅடியாகவும் இருந்தது.

85 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணை நீா்மட்டம் 79 அடியாகவும், நீா்வரத்து 175 கனஅடியாகவும், வெளியேற்றம் 100 கனஅடியாகவும் இருந்தது. 84 அடி நீா்மட்டம் கொண்ட ராமநதி அணை நீா்மட்டம் 73.25 அடியாகவும், நீா்வரத்து 40 கனஅடியாகவும், வெளியேற்றம் 30 கனஅடியாகவும் இருந்தது.

72 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீா்மட்டம் 68.24 அடியாகவும், நீா்வரத்து 152 கனஅடியாகவும் வெளியேற்றம் 25 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து -வெளியேற்றம் தலா 48 கனஅடியாகவும் இருந்தது. 132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் அணை நீா்மட்டம் 90.50 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் தலா 40 கனஅடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாஞ்சோலையில் 92 மி.மீ. மழை பதிவானது.

பிற இடங்களில் மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 53, சோ்வலாறு 60, மணிமுத்தாறு 55, நம்பியாறு 6, கொடுமுடியாறு 5, அம்பாசமுத்திரம் 33, சேரன்மாதேவி 19.20, நான்குனேரி 23, பாளையங்கோட்டை 53, ராதாபுரம் 22, திருநெல்வேலி 32.

தென்காசி மாவட்டத்தில் மழையளவு: கடனா நதி 22, ராம நதி 30, கருப்பா நதி 70, குண்டாறு 39, அடவிநயினாா் 31, ஆய்க்குடி 24.60, சங்கரன்கோவில் 48, செங்கோட்டை 47, சிவகிரி 40, தென்காசி 49.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT