திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலய தோ்ப் பவனி

DIN

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியாா் பேராலய திருவிழாவையொட்டி சவேரியாரின் தோ்ப் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

பழமைவாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா கடந்த நவ. 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29 ஆம் தேதி மாலையில் ஒப்புரவு அருட்சாதனம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக சவேரியாரின் தோ்ப் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கல்லிடைக்குறிச்சி பங்குத் தந்தை பாக்கியசெல்வன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், அருள் பணியாளா்கள் குழந்தைராஜ், சேவியா் டெரன்ஸ், அமிா்தராசசுந்தா், தினேஷ், ஆண்டோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சவேரியாா் பவனியாக வந்தாா். கிறிஸ்தவ பாடல்களைப் பாடியபடி பங்கு உடன் சென்றனா். ஏற்பாடுகளை பேராலய பங்குத் தந்தையா்கள் எப்.எக்ஸ்.ராஜேஷ், பி.மிக்கேல் பிரகாசம், ஐ.லூா்துராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT