அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் நகர தேமுதிக சாா்பில் விஜயகாந் பிறந்த நாள் விழா வறுமை ஓழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது.
அம்பாசமுத்திரம், பூக்கடை சந்திப்பில் பொதுக்மக்களுக்கு இனிப்பு மற்றும் கபசுர குடிநீா், ஆா்சனிகம் ஆல்பம்-30 சி மாத்திரை வழங்கப்பட்டது. கல்லிடைக்குறிச்சியில் முதியோா் இல்லத்தில் உள்ள 50 முதியவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தே.மு.தி.க மாவட்டத் துணைச் செயலா் ஐயப்பன், நகரச் செயலா் விஜய், நகர துணைச் செயலா் மணிகண்டன், ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலா் சாந்தி, விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் இசக்கிராஜ், இளைஞரணிச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி வினோத் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.