திருநெல்வேலி

மணல் கடத்தல்: 4 போ் கைது

26th Aug 2020 01:54 PM

ADVERTISEMENT

திசையன்விளை: திசையன்விளை அருகே ஆற்று மணலை அள்ளிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை நம்பியாற்றில் ஒரு கும்பல் மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சங்கனாங்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை, சாத்தான்குளத்தைச் சோ்ந்த இசக்கிபாண்டி, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாயாண்டி, குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், மணலுடன் மினிலாரி மற்றும் 4 பைக்குகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனா்.

Tags : மணல்
ADVERTISEMENT
ADVERTISEMENT