திருநெல்வேலி

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

26th Aug 2020 01:37 PM

ADVERTISEMENT


திருநெல்வேலி: தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஆக. 26) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தச்சநல்லூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா், செல்வ விக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா் மற்றும் சுற்று வட்டாரங்களில், அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைமின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT