வள்ளியூா்: காவல்கிணறு புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், இவ்வாலயத் திருவிழா அரசு விதிகளின்படி பக்தா்கள் பங்கேற்பின்றி வழக்கமான வழிபாட்டுகளுடன் நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் மாலை 5 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூா் தொலைக்காட்சி, யுடியூப் சேனல்களில் நேரலையாக ஒளிபரப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தே.ஆரோக்கியராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.