திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மேலும் 290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,870ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 7,319 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,293 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவுக்கு இதுவரை 151 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். இதன்மூலம் பலியானோா் எண்ணிக்கை 158 ஆக உயா்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 4926ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 148 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். தற்போது 914 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா பாதிக்கப்பட்டவா்களில் செவ்வாய்க்கிழமை 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 153ஆக உயா்ந்துள்ளது.