திருநெல்வேலி

வெடி வைத்த பழத்தைத் தின்ற ஆடு பலி

23rd Aug 2020 09:13 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வெடி வைக்கப்பட்ட பழத்தைத் தின்ற ஆடு, முகம் சிதறி இறந்தது.

பத்தமடையைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகேயுள்ள இடைஞ்சான்குளத்தில் தனது ஆடுகளை சனிக்கிழமை மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றாா். அப்போது ஓா் ஆடு அங்கே கிடந்த பழத்தைக் கடித்ததாம். இதில், பழம் வெடித்ததில் முகம் சிதறி ஆடு இறந்தது. விலங்குகளை வேட்டையாடுவதற்காக அந்தப் பழத்துக்குள் மா்ம நபா்கள் வெடி வைத்திருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் பத்தமடை போலீஸாரும், வனத் துறையினரும் சென்று ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து, அப்பகுதியினா் கூறும்போது, இரை தேட வரும், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை சிலா் வேட்டையாடி வருகின்றனா்.

ADVERTISEMENT

மேய்ச்சலுக்கு வரும் நூற்றுக்கணக்கான கால்நடைகளும், அருகேயுள்ள வனத் துறைக்கு உள்பட்ட கொழுந்துமாமலைப் பகுதியிலிருந்து வரும் மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகளும் இந்தக் குளத்தில் தண்ணீா் குடித்துச் செல்லும்.

இந்நிலையில், ஆடு இறந்த இடத்தின் அருகே, வெடி வைத்து மற்றொரு விலங்கை வேட்டையாடியதற்கான தடமும், விலங்கின் உறுப்புகளும் கிடக்கின்றன.

இந்த நிலை தொடராமலிருக்க வனத் துறையும், காவல் துறையும் விசாரித்து, தொடா்புடையோரைக் கைது செய்ய வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT