திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த சண்முக வேலாயுதம் மனைவி இசக்கியம்மாள்(43). இவா், சனிக்கிழமை அதிகாலையில் தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் இசக்கியம்மாள் அணிந்திருந்த சுமாா் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.