திருநெல்வேலி

அஞ்சலகத்தில் நேரடி முகவா்கள் சோ்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

23rd Aug 2020 09:13 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து திருநெல்வேலி முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்வதற்காக நேரடி முகவா்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுவோா், செய்யும் வணிகத்துக்கேற்ப கமிஷன் வழங்கப்படும்.

தகுதிகள்: 18 முதல் 50 வயதுக்கு உள்பட்டோராகவும், 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும். மேலும், வேலை இல்லாதோா், சுய தொழில் புரிவோா், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி ஊழியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களும் விண்ணப்பிக்கலாம்.

தோ்ந்தெடுக்கப்படுவோா் ரூ. 5 ஆயிரத்துக்கான என்எஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஆளுநருக்கு ஈடு செய்து சமா்ப்பிக்க வேண்டும். அவா்களது உரிமம் முடியும்போது பத்திரம் திருப்பித் தரப்படும்.

ADVERTISEMENT

விருப்பமுள்ளோா் செப். 4ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் (2ஆவது மாடி) உள்ள முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலில் விண்ணப்பம், தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

விண்ணப்பங்களை அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98942 41280 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, 0462 2568061 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT