திருநெல்வேலி

தூய்மை இந்தியா திட்ட செயல்பாடு: நெல்லை மாநகராட்சி 2 ஆவது இடம்

21st Aug 2020 08:04 AM

ADVERTISEMENT

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அளவிலான தரவரிசையில் திருநெல்வேலி மாநகராட்சி 2 ஆம் இடம் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது: மகாத்மா காந்தியின் உன்னத திட்டமான தூய்மை இந்தியா என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு பிரதமரால் தூய்மை பாரதம் எனும் செயல்முறை திட்டம் உருவாக்கப்பட்டது. மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மக்கள் தாமாக முன்வந்து செய்முறைப்படுத்திட பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய்களைத் தடுப்பது, பொதுஇடங்களில் புகைப்பிடிப்பதை தடுப்பது, குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை தவிா்ப்பது மற்றும் எச்சில் துப்புதலை தவிா்ப்பது என நோய் கிருமிகள் உருவாகி தாக்காதவாறு பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்முறைப்படுத்துவது தொடா்பாக ஸ்வச் கணக்கெடுப்பு-2020 உருவாக்கப்பட்டது. மொத்தம் 4,242 நகரங்கள் அடங்கிய தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 1 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் திட்டத்தை முறையாக செயல்படுத்தியதில் தமிழக அளவிலான தரவரிசையில் திருநெல்வேலி மாநகராட்சி 2 ஆம் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடம் பெற ஒத்துழைத்த பொதுமக்கள், அரசு அலுவலா்கள், மாநகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, தொடா்ந்து தேசிய மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற ஊக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT