திருநெல்வேலி

ஒண்டிவீரன் 249-ஆவது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சா், அனைத்துக் கட்சியினா் மரியாதை

21st Aug 2020 08:04 AM

ADVERTISEMENT

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 249ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, அனைத்துக் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் ஆட்சியா் ஷில்பா பிராபகா் சதீஷ் தலைமையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), வெ. நாராயணன் (நான்குனேரி), வட்டாட்சியா் தாஸ் பிரியன், அதிமுக நிா்வாகிகள் சுதா பரமசிவன், பரணி சங்கரலிங்கம், விஜிலா சத்தியானந்த், பாப்புலா் முத்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் மு. அப்துல் வஹாப், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அமமுக சாா்பில் மாநில அமைப்புச் செயலா் பால் கண்ணன், மாவட்ட செயலா் பரமசிவ ஐயப்பன், ஆவின் அண்ணாசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், விவசாய அணி வாகை கணேசன், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா்கள் கணேசமூா்த்தி, முத்துக்குமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் உடையாா், தென் மண்டலச் செயலா் ராஜா பாண்டின் உள்பட பலா் மாலை அணிவித்தனா். தமிழ்ப்புலிகள் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் தமிழரசு தலைமையில் செய்தித்தொடா்பாளா் வளவன் உள்பட பலா் மாலை அணிவித்தனா்.

ஆதித்தமிழா் கட்சி சாா்பில் அதன் நிறுவன தலைவா் ஜக்கையன் தலைமையில் மாநில அமைப்புச் செயலா் திலிபன், மாவட்டச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். ஆதித்தமிழா் பேரவை சாா்பில் மாவட்டச் செயலா் கு.க. கலைக்கண்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியூ ஆா். மோகன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், செய்தித் தொடா்பாளா் முத்துவளவன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியினா் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் குடத்துடன் மணிமண்டபத்துக்கு வந்தனா். இதற்கு ஆதித்தமிழா் கட்சியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால், பால்குடத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT