இட்டமொழி முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இட்டமொழி வடக்கு தெரு முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு திருவிளக்கு பூஜையில் சிவசக்கி மகளிா் மன்றத்தினா் அம்மனை வாழ்த்தி பாடல்கள் பாடினா். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. , அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.