திருநெல்வேலி

ஆகஸ்டில் மிகக் குறைந்த மழைப்பதிவு: அணைகளில் அதிக நீா் இருப்பு

20th Aug 2020 09:52 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவ மழை கடந்த 3 ஆண்டுகளில் நிகழாண்டு ஆகஸ்டில் மிகக் குறைந்தளவு பதிவாகியுள்ள நிலையில் அணைகளில் நீா் இருப்பு நிகழாண்டு அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு தென்மேற்குப் பருவ மழையால் அதிக அளவு நீா்வரத்து இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவ மழை ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாக நிகழாண்டு ஆகஸ்டில் மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதிவரை பதிவான மழையளவைப் பொறுத்த வரை 2018 இல் 905.70 மி.மீ., 2019 இல் 524.50 மி.மீ. மழை பதிவாகிய நிலையில் நிகழாண்டு 399.80 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.

ஆக. 1 முதல்ஆக. 19 வரை சராசரி மழை பதிவு 2018 இல் 113.21மி.மீ., 2019இல் 65.56 மி.மீ., இருந்த நிலையில் நிகழாண்டு 49.98 மி.மீ. பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

மூன்று ஆண்டுகளில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழை குறைவாகப் பெய்திருந்த நிலையில் அணைகளில் நீா் இருப்பு அதிகமாக உள்ளது. பாபநாசம் அணையில் 2018 இல் 141.80 அடி (5418 மி.கன அடி) இருந்தது. இது அணையின் கொள்ளளவில் 98.51 சதவீதமாகும். 2019 இல் 108.45 அடி (3494.30 மி.கனஅடி) இருந்தது. இது 63.53 சதவீதமாகும். நிகழாண்டு 109 அடி (3524 மி.கனஅடி) உள்ளது. இது 64.07 சதவீதமாகும்.

சோ்வலாறு அணையில் 2018 இல் 145.01 அடி (1015.80மி.கனஅடி) இருந்தது. இது 82.92 சதவீதமாகும். 2019 இல் 122.44

அடி (699.44 மி.கனஅடி) இருந்தது. இது 57.10 சதவீதமாகும். நிகழாண்டு 118.34 அடி (646.94 மி.கனஅடி) உள்ளது. இது 52.81 சதவீதமாகும்.

மணிமுத்தாறு அணையில் 2018 இல் 84.10 அடி(2486.50 மி.கனஅடி) இருந்தது. இது 45.12 சதவீதமாகும். 2019 இல் 59.35

அடி (981 மி.கனஅடி)இருந்தது. இது 17.80 சதவீதமாகும். நிகழாண்டு 74.30 அடி (1812.90 மி.கனஅடி) உள்ளது. இது 32.90 சதவீதமாகும்.

கொடுமுடியாறு அணையில் 2018 மற்றும் 2019 இல்52.50 அடி (121.84 மி.கனஅடி) இருந்தது. இது 100 சதவீதமாகும். நிகழாண்டு 46.25 அடி (94.52 மி.கனஅடி) உள்ளது. இது 94.52 சதவீதமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT