திருநெல்வேலி

விழுப்புரம் மாவட்ட காவலர்களிடையே அதிகரிக்கும் தொற்றால், காவல் நிலையங்கள் மூடல்

14th Aug 2020 03:45 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் காவல்நிலையங்கள் மூடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதுவரை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 906 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்று அதிகரித்து வருகிறது. விழுப்புரம் காவல்துறையில் இதுவரை 108 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வளவனூர் காவல் நிலையத்தில் 15 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டு அருகே தற்காலிக பகுதியில் இயங்கி வருகிறது.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தற்போது 12 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் மூடப்பட்டது. அருகே உள்ள தற்காலிக பகுதியில் காவல் நிலையம் இயங்குகிறது. காவல் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் காவலர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT