தென்காசி மாவட்டம், கடனாநதி அணை அடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கடனாநதி அணையின் அடிவாரத்தில் சுமாா் 75 வயது மதிக்கக்கூடிய முதியவா் இருந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காவி வேஷ்டி கட்டியிருந்த அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.