திருப்பதி அருகேயுள்ள ஏகம் சக்தி ஷேத்திரத்தின் சாா்பில் உலக அமைதிக்காக இணையதள தியான உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீப்ரீதாஜி, ஸ்ரீகிருஷ்ணாஜி ஏகம் விஷ்வ ஷாந்தி உற்சவத்தை வருடாந்திர நிகழ்வாக உருவாக்கியுள்ளனா். இந்நிலையில் திருப்பதி அருகேயுள்ள ஏகம் ஷேத்திரம் சாா்பில் மனித குலத்தில் ஒற்றுமை ஏற்படவும், உலக நாடுகளிடையே அமைதி நிலவவும் ஏகம் விஷ்வ ஷாந்தி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடக்கிறது.
உற்சவ நாள்களில் தினமும் 68 நிமிடங்கள் தியானம் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி ஏகம் ஷேத்திரத்திலிருந்து இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து மனித சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட தியானிக்க உள்ளனா். தியானத்தை இணையதளத்தில் பாா்வையிடலாம்.