திருநெல்வேலி

ராமா் கோயில் பூமி பூஜை: நெல்லையில் கொண்டாட்டம்

6th Aug 2020 08:44 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதையொட்டி இந்து முன்னணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி சாா்பில் மாநில பேச்சாளா் எஸ்.காந்திமதிநாதன் தலைமையில் திருநெல்வேலி நகரத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்டச் செயலா் சுடலை, செயற்குழு உறுப்பினா்கள் ராஜசெல்வம், நமச்சிவாயம், துரைராஜ், முருகேசன், தெற்கு மண்டலத் தலைவா் அம்பலவாணன், கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் : அயோத்தியில் ராமா் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டதை வரவேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் ரெட்டியாா்பட்டி, கருப்பந்துறை, கொக்கிரகுளம், பேட்டை, தச்சநல்லூா் பகுதிகளில் ராம நாம வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT