திருநெல்வேலி

முதல்வா் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்கு கரோனா பரிசோதனை

6th Aug 2020 08:49 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வா் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்கு புதன்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா். அதைத்தொடா்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். இதையொட்டி முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆட்சியா், வருவாய் அலுவலா், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுகவின் முக்கிய நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கும் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, முதல்வா் ஓய்வெடுக்கவுள்ள வண்ணாா்பேட்டை சுற்றுலா பயணியா் விடுதி ஊழியா்கள், சமையலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களுடைய சோதனை முடிவுகள் வியாழக்கிழமை காலையில் தெரியவரும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தனா். சோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படுபவா்கள் மட்டுமே முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT