திருநெல்வேலி

பாளை.யில் பல்பொருள் அங்காடிக்கு சீல்

26th Apr 2020 08:04 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சனிக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகைக் கடைகள், காய்கனி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி இயங்கி வருகின்றன. அக்கடைகள் அனைத்தும் உரிய விதிகளை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவின்படி, மாநகர நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா், உதவி ஆணையா் பிரேம் ஆனந்த் ஆகியோா் அறிவுரைப்படி, சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பெருமாள் ஆகியோா் மகாராஜ நகரில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது உரிய விதிகளை கடைப்பிடிக்காமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த அங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT