திருநெல்வேலி

ஊரடங்கு மீறல்: நெல்லையில் 1,264 போ் மீது வழக்கு

26th Apr 2020 07:54 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் தடையை மீறியதாக சனிக்கிழமை வரை 1,264 போ் மீது 1,121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருப்பதால், திருநெல்வேலி மாநகரில் தேவையில்லாமல்

மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டன. எனினும், வெளியே தேவையின்றி சுற்றித் திரிவோரை தடுக்கவும், வெளி மாநிலங்களில் இருந்து விதிகளை மீறி வருவோரை தடுக்கவும் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

மாநகரில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக சனிக்கிழமை 17 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவா்கள் பயன்படுத்திய 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 1,264 போ் மீது 1,121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 678 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT