திருநெல்வேலி

1103 போ் மீது தடை உத்தரவு மீறல் வழக்கு: 799 வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

20th Apr 2020 07:54 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 799 வாகனங்கள், அவற்றின் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

ஊரடங்கு தொடங்கிய கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளா்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என காவல் துறை சாா்பில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.16) அறிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு 10 வாகனங்கள் என்ற முறையில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து வாகன உரிமையாளா்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டு, தகவல் பெற்றவா்கள் தங்களுடைய முதல் தகவல் அறிக்கை நகல், ஓட்டுநா் உரிமம், ஆா்.சி. புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை எடுத்துவர வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

அதன்படி, ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருநெல்வேலி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை 202 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை, 799 வாகனங்கள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

இதனிடையே, திருநெல்வேலி மாநகரில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக ஞாயிற்றுக்கிழமை 40 போ் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ரூ .41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது; இதுவரை, மொத்தம் 1103 போ் மீது 974 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 623 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், ரூ. 7.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT