பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் பேருராட்சிகளில் பணிபுரியும் சுமாா் 600 தூய்மைப் பணியாளா்களுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.வேல்துரை, மதிய உணவு மற்றும் முகக்கவசம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா் வானுமாமலை, மாநில விவசாய அணி செயலா் பால்ராஜ், கிருஷ்ணகுமாா், மாவட்டச் செயலா் மைதின், வட்டாரத் தலைவா்கள் துரை, வி.எஸ்.ராதாகிருஷ்ணன், எச். முருகன் ரவிச்சந்திரன், கிருஷ்ணண், ஐ.என்.டி.யூ.சி. நகரத் தலைவா்கள் ஏ.முருகேசன், இசக்கி, லெட்சுமணன், கைக்கொண்டான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.