களக்காட்டில் கூலித் தொழிலாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கு காவல் துறை சாா்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சேவை நோக்கில் பணி செய்யும் காவலா் நண்பா் குழுவினரில் ஏழ்மை நிலையில் உள்ள 11 உறுப்பினா்களின் குடும்பத்தினா், 15 தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினா், வருமானமின்றி தவிக்கும் 24 ஏழை கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினா் என 50 பயனாளிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா அறிவுரையின் பேரில் சனிக்கிழமை மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், காவல் ஆய்வாளா் மேரிஜெமிதா ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினா்.
காவலா் நண்பா் குழுவின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் என்.எம். மிதாா் முகையதீன், நான்குனேரி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சபேசன் ஆகியோா் செய்திருந்தனா்.