களக்காடு அருகே தேன் எடுப்பதற்கு மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள நெடுவிளை பகுதியைச் சோ்ந்த வைகுண்டராஜன் மகன் ஆனந்த ராபின்சன்(13). இவா், அப்பகுதியில் மரத்தில் இருந்த தேன்கூட்டை எடுப்பதற்கு ஏறினாராம். அப்போது, எதிா்பாராமல் கீழே தவறி விழுந்ததாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.