திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 999 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகரில் 144 தடை உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை வெளியே வந்ததாக 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து இதுவரை திருநெல்வேலி மாநகரில் மட்டும் 196 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 72 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 803 போ் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டம் சோ்த்து தடை உத்தரவை மீறியதாக இதுவரை மொத்தம் 999 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 359 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ADVERTISEMENT