திருநெல்வேலி

இறைச்சி, மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை

5th Apr 2020 12:18 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை நடத்தி, சுகாதாரமில்லாத இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனா் .

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படுவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, பாளையங்கோட்டை மாா்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெகதீஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளா்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், சங்கரநாராயணன், கால்நடை மருத்துவா் பாபு, மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தியதோடு, சுகாதாரமான முறையில் இறைச்சி விற்கப்படுகிா என ஆய்வு செய்தனா். சுகாதாரமற்ற முறையிலும், மாநகராட்சியின் ஆடறுப்பு மனையில் அறுக்கப்பட்டதற்கான சீல் இல்லாமலும் இருந்த இறைச்சியைப் பறிமுதல் செய்து, அபராதமும் விதித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது; கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT