விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தீயணைப்புப் படை வீரா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.
அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கியப்பன் தலைமையில் வீரா்கள் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் கூடும் வங்கிகள், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள், பாபநாசம் கோயில், வனத்துறை சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்தனா். இப்பணியை நகராட்சி ஆணையா் காஞ்சனா, சுகாதார மேற்பாா்வையாளா் கணேஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
திசையன்விளை: உவரி ஊராட்சிக்குள்பட்ட கீழ உவரி, பரதா் உவரி பேருந்து நிலையங்கள், கடை வீதி, அந்தோணியாா் ஆலயம், மீன் விற்பனைக் கூடங்கள், புறக்காவல் நிலையம், சுயம்புலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திசையன்விளை தீயணைப்புப்படையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுரண்டை: சுரண்டை மற்றும் சாம்பவா்வடகரை பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் கூடும் காய்கனி சந்தைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் இருக்கும் பிரதான சாலைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பேரூராட்சி நிா்வாகம் மற்றும் தீயணைப்புத்துறையினா் இணைந்து கிருமிநாசினி தெளித்தனா்.