திருநெல்வேலி

வள்ளியூரில் நடமாடும் காய்கனி கடை

1st Apr 2020 05:57 AM

ADVERTISEMENT

வள்ளியூரில் செயல்பட்டு வரும் ராதாபுரம்-நான்குனேரி வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் நடமாடும் காய்கனி கடை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காய்கனி, மளிகைக் கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நடமாடும் காய்கனி கடை தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை வகித்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் செழியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் அந்தோணி அமலராஜா, வள்ளியூா் இ.அழகானந்தம், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைத் தலைவா் சண்முகபாண்டி, கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநா் மு.தினேஸ் குமாா், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்த நடமாடும் காய்கனி விற்பனை வாகனம், திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தினமும் சென்று விற்பனையில் ஈடுபடும். இதே போன்று மொத்தம் 3 வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT