திருநெல்வேலி

அம்பையில் கபசுர குடிநீா் விநியோகம்

1st Apr 2020 05:54 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் காளிமுத்து பொதுமக்களுக்கும், நகராட்சிப் பணியாளா்களுக்கும் கபசுர குடிநீா் வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் ஜின்னா, சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் 93 குடும்பத்தினருக்கு கிருமிநாசினி, முகக் கவசம், நிலவேம்புக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT