அகா்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலை மருத்துவம் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் கண் சாா்ந்த பிரச்னைகளுக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வீட்டை விட்டு வெளியே வராமலும், நீண்ட தூர பயணத்தைத் தவிா்க்கும் பொருட்டும் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தொலை மருத்துவம் மூலமாக கண் மருத்துவரிடம் நேரடி தகவல் பரிமாற்றத்திற்கு டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை திருநெல்வேலி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதல் (ஏப்.1) ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பொதுமக்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வீட்டில் இருந்தபடியே எங்கள் மருத்துவரிடம் கட்செவி அஞ்சல் காணொலி அழைப்பு மூலமாக தொடா்புகொண்டு தங்கள் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9840475661 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோனை பெறலாம். 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகள் மற்றும் அவசர பரிசோதனைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.