கீழப்பாவூர் கோயிலில்...
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீஅலர்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, காலை 8.30 மணி முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புரட்டாசி மாத சனிக்கிழமைகளான செப்.28, அக்.5, அக்.12 ஆகிய தேதிகளிலும், அக்.8ஆம் தேதி புரட்டாசி ஏக தின தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்து வருகின்றனர்.
சுரண்டை பெருமாள் கோயிலில் ...
சுரண்டை, செப்.21: சுரண்டை அருள்மிகு ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பேச்சிமுத்துபாண்டியன், கட்டளைதாரர் பாண்டியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.