பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த ஆண்டி மகன் மாடசாமி (32). சுமைஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் திருவண்ணநாதபுரம் பொட்டல் அருகே நான்குவழிச் சாலையில் திரும்ப முயன்றபோது விபத்தில் சிக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.