தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்லூரி குழுமங்களின் தலைவர் என்.மணிமாறன் தலைமை வகித்தார். கல்லூரிகளின் செயலர் பத்மாவதி மணிமாறன், நிர்வாக அலுவலர் பத்மாவதி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, 250 மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் அ.பீர்முகைதீன் வரவேற்றார். துணை முதல்வர் ராமர் நன்றி கூறினார்.