திருநெல்வேலி

சிவகிரியில் உதவித்தொகை கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

22nd Sep 2019 04:36 AM

ADVERTISEMENT


சிவகிரி வட்டாட்சியரிடம் உதவித்தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம், வாசுதேவநல்லூர் ஒன்றியக் கிளை சார்பில், மாவட்ட இணைச் செயலர் ச. சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் வட்டாட்சியர் கிருஷ்ணவேலிடம் அளித்த மனு: 
 40  சதவீதமும், அதற்கு மேலும் ஊனமுற்ற அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்கவேண்டும். திருமண உதவித் தொகையை ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டையும்,  வங்கிகள் மூலம் மானியக் கடனும்  வழங்க வேண்டும். சிவகிரி பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கழிப்பிடத்தைத் திறக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  உதவித் தொகை கோரி 45 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். 
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டனர்.  இதில்,  சங்கப் பொருளாளர் க. ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் பி. தியாகராஜன், எஸ். குமாரசாமி, மாவட்டத் தலைவர் செல்வசுந்தரி, மாவட்ட துணைச் செயலர்கள் எஸ். அகஸ்தியராஜன், எம். இசக்கி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT