ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மாலையில் சிறுமிகள் கலந்து கொண்ட புஷ்பாஞ்சலி நடைபெற்றது. மார்க்கெட் பிள்ளையார் கோயிலில் தொடங்கிய புஷ்பாஞ்சலி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, 1503 திருவிளக்குப் பூஜை, திங்கள்கிழமை அன்னதானம், இரவு சிறப்பு அலங்கார பூஜை, செவ்வாய்க்கிழமை 1008 குடம் மஞ்சள் தண்ணீர் அபிஷேகம், 207 முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் இரவு அலங்கார சப்பரத்தில் பவனி வருதல் ஆகியவையும் புதன்கிழமை மஞ்சள் நீராடுதல், கும்மிபாட்டு ஆகியவையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ராஜன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.