பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் நிலை தொடர்பாக, சென்னை காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமார், திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார்.
இதையொட்டி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில், திருநெல்வேலி மாநகர கூடுதல் காவல் ஆணையர்கள் வெள்ளைத்துரை, பாஸ்கரன், கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் விஜயபாஸ்கர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.