இந்திய மாணவர் சங்கம், இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் வேலை கேட்டு போராடிய சங்க உறுப்பினர்களை தாக்கியதாக, அம்மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஹிந்தி திணிப்பை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சத்யா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மேனகா தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் உச்சிமாகாளி, முன்னாள் மாவட்டச் செயலர் ராஜகுரு, பாளையங்கோட்டை வட்டக் குழு தலைவர் ஸ்ரீராம், மாநிலக் குழு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் தினேஷ் நிறைவுரையாற்றினார். இதில், இரு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.