திருநெல்வேலி

புளியங்குடி பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

13th Sep 2019 06:54 AM

ADVERTISEMENT

புளியங்குடி எஸ்.வீ.சி. சாய்நிகேதன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வியாழக்கிழமை ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. 
எஸ்.வீ.சி. கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் முருகையா தலைமை வகித்தார். எஸ்.வீ.சி. கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் கோமு, மகாலட்சுமிஆகியோர் பங்கேற்று, ஓணம்  குறித்துப் பேசினர். தொடர்ந்து, மாணவர்கள் வாமன அவதாரம், மகாபலி சக்கரவர்த்தி, இந்திரன்,விஷ்ணுபோல வேடம் தரித்து ஓணம் திருவிழா குறித்த நாடகத்தை நிகழ்த்தினர். பின்னர், கதகளி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT