திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

13th Sep 2019 10:20 AM

ADVERTISEMENT

புதிரை வண்ணார் எழுச்சி பேரவை சார்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையம் அருகே மந்தியூரில் இளைஞர் பிரசாந்த் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாந்தின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச்செயலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி தலைவி பாவணி மாரியம்மாள், நிர்வாகிகள் சுபாஷ், சந்தோஷ், மதன், நிதின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT